Posts

ஆரியரும், தமிழ்த் தொண்டும்

ஆரியப் பார்ப்பனர்கள் என்பதால் , பரிதிமாற்கலைஞர் , இராமச்சந்திர தீட்சதர் , கே . வி . சுப்பிரமணிய அய்யர் , உ . வே . சா ., பாரதியார் , சுப்பிரமணிய சிவா போன்ற இவர்களைப் புறக்கணிக்க முடியுமா ? இவர்கள் தமிழ்த் தேசிய ஒற்றுமைக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்கள் . எனவே , பெரியாரின் ஆரிய எதிர்ப்பு தவறானது என்கிறார் குணா . விதிவிலக்குகளைப் பொதுக் கருத்தாக்கி வாதிடுவதோ , முடிவிற்கு வருவதோ கூடாது என்று அடிப்படை அறிவுகூட இன்றி பெரியாரின் ஆரிய எதிர்ப்பு தவறு என்பது பெரும் பிழை ஆகும் . பரிதிமாற் கலைஞர் என்கிற சூரிய நாராயண சாஸ்திரியார் தான் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தார் . ஆனால் 99.9 சதவீதம் ஆரியப் பார்ப்பனர்கள் அதை ஏற்கவில்லையே இன்றளவும் ஏற்கவில்லையே . செம்மொழி என்ற வார்த்தை எங்கிருந்தாலும் அதைச் செதுக்கி எடுக்கிறார்கள் ; மறைத்துப் பதுக்குகிறார்கள் . இதுதானே   நடைமுறை .   ஒரு சூரிய நாராயண சாஸ்திரியாருக்காக ஆரியப் பார்ப்பனர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ள முடியுமா ? உ . வே . சா . தமிழ்ப் பணியாற்றி